Advertisment

ஆய்வின்போது ஆடம்பர உணவுகள் ஏற்பாடு செய்ய வேண்டாம் - வெ. இறையன்பு வேண்டுகோள்!

iraianbu

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்டங்களில் ஆய்வு செய்துவருகிறார்.

Advertisment

இந்நிலையில், ஆய்வின்போது ஆடம்பர உணவுகள் வேண்டாம் என தற்போது மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதத்தின் மூலமாக வலியுறுத்தியுள்ளார். அதில், “ஆய்வு செய்ய வரும்போது மாவட்ட நிர்வாகத்தினர் ஆடம்பர உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம். காலை, இரவு நேரங்களில் எளிய உணவும், மதியம் இரண்டு காய்கறிகளுடன் கூடிய சைவ உணவும் போதும்”என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

ஏற்கனவே, அரசு விழாக்களில் தான் எழுதிய புத்தகங்களைப் பரிசாக வழங்க கூடாது. அது சுய விளம்பரமாகபார்க்கக்கூடும் என தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

District Collector iraianbu corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe