'இதை செய்; நானே கூப்பிட்டு தலைமை பொறுப்பை தருகிறேன்'-அட்வைஸ் கொடுத்த ராமதாஸ்

'Do this; I will call you and give you the leadership role' - Ramadoss advises Anbumani

பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கடந்த 29ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து, அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

அதனைத் தொடர்ந்து 01/06/2025 அன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ''என்னை யாரும் இயக்க முடியாது. சுதந்திரம் கிடைத்துள்ளது என்று அன்புமணி சொல்வது அவருடைய கருத்து. அன்புமணி விகாரம் குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது எல்லா கட்சிகளிலும் நடக்கும் ஒன்றுதான்' என தெரிவித்திருந்தார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் பாமக நிர்வாகிகள் குறிப்பாக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (05/06/2025) காலை தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, ராமதாஸுடன் சந்திப்பு மேற்கொண்டனர். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நிகழந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோரும் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் உடன் சந்திப்பு மேற்கொண்டனர்.

இந்நிலையில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையிலான சந்திப்பில் பேசப்பட்ட விஷயம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ''கட்சி நிர்வாகபொறுப்பை நான் பார்த்துக் கொள்கிறேன். கிராமம் கிராமமாக சென்று கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபடு. எனக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பணியாற்றிய பிறகு நானே கூப்பிட்டு கட்சி தலைமை பொறுப்பை தருகிறேன்' என அன்புமணிக்கு ராமதாஸ் அட்வைஸ் கொடுத்ததாககூறப்படுகிறது.

anbumani ramadoss meetings pmk Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe