Advertisment

குடிதண்ணீருக்கான போராட்டத்தில் சவால்விட்ட திமுக மா.செ!

நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரில் குடி தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிறது.

Advertisment

 The DMK's struggle for drinking water

இந்நிலையில் நெல்லை மேற்கு மாவட்டதிமுகவின்மா.செவான சிவபத்மநாபன், நகர செ.சங்கரன் மற்றும் அய்யாத்துரை பாண்டியன் ஆகியோரின் தலைமையில் கட்சியினர் பெண்கள் காலிக்குடங்களுடன் இன்று நகரின் தேரடித்திடலில் கூடினர். குடிதண்ணீருக்கான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Advertisment

ஆர்ப்பாட்டத்தின் போதும், தி.மு.க. மா.செ. சிவபத்மநாபன் தொகுதி அமைச்சருக்கு மக்கள் மீது அக்கறையில்லை. நகருக்கு, வரும் வெள்ளிக் கிழமைக்குள் குடி தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும். இல்லை என்றால், முடியவில்லை என்று அறிவித்து விடுங்கள். நாங்களே மக்களுக்கான குடி தண்ணீர் விநியோகத்தைப் பார்த்துக் கொள்கிறோம். என்று பேசினார். கூட்டத்தில் திரளான ஆண்கள் பெண்கள் திரண்டிருந்தனர்.

Nellaiyammal protest (552
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe