புதுக்கோட்டையில் 18 ந் தேதி நடந்த அ.தி.மு.க வுக்கு எதிராக தி.மு.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அரிமழம் ஒ.செ. ராமலிங்கம், மற்றும் கலை இலக்கிய துணைச் செயலாளர் தென்னலூர் பழனியப்பன் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கரை அவதூறாக பேசியதாகவும் அதை கேட்கச் சென்ற போது தன்னை அடிக்க பாய்ந்தார்கள் என்றும் அ.தி.மு.க மச்சுவாடி கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று அமைச்சரின் ஆதரவாளர்கள் விராலிமைலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

dmk

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அதே நேரத்தில் புதுக்கோட்டை நகரில் ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள கடைகளை அடைக்க சொல்லி அ.தி.மு.க வினர் கட்டாயப்படுத்தி அடைத்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த திருமயம் எம்.எல்.ஏவும், தி.மு.க தெற்கு மா.செ (பொருப்பு) ரகுபதி.. அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னார் என்பதற்காக காவல் துறை தீவிரமாக செயல்படுகிறது. நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் கிடைக்காது நீதிமன்றம் போய் வாங்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க வினர் கேட்டால் உடனே அனுமதி கொடுக்கிறார்கள். இன்று தி.மு.க வினர் கடைகளை உடைக்க வந்துள்ளனர். இதையெல்லாம் காவல் துறை வேடிக்கை பார்க்கிறது. தகவல் கொடுத்தும் வரவில்லை. இவற்றுக்கெல்லாம் அறவழியில் போராடுவோம். அராஜகம் செய்யமாட்டோம். தொடர் போராட்டங்களை நடத்துவோம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதியுடன் பெரிய போராட்டம் நடத்துவோம் என்றார்.