dmk

Advertisment

திரிபுரா, மற்றும் மேற்கு வங்கத்தில் லெனின் சிலை தகர்க்கப்பட்டது கொந்தளிப்பைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேசிய செயலர் எச்.ராஜாவின் பெரியார் சிலை அகற்றம் பற்றிய டிவிட்டைத் தொடர்ந்து திருப்பத்தூரில் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டது.

தி.க. தி.மு.க. மற்றும் சுயமாரியாதை இயக்கங்கள் மக்களின் கொதிப்பையும், கொந்தளிப்பையும் கிளப்பி விட்டது தமிழகம் முழுவதும் பெரியார் சிலை, மற்றும் சிலை உடைப்பு அரசியலைக் கண்டித்து தி.மு.க.வினர் பல்வேறு அமைப்பினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தின் தென்காசி நகரில் தி.மு.க. செ. சிவபத்மநாபனின் தலைமையில் கண்டனப் போராட்டம் நடந்ததுடன் எச்.ராஜாவின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

madurai

இதேபோல், பெரியார் சிலையை உடைப்போம் என்று பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து மதுரை ஒத்தக்கடையில் மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜி.எல்.ரேணுகா ஈஸ்வரி மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.