Advertisment

திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது- கே.எஸ்.அழகிரி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக திமுக செயல்பட்டுள்ளது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,

Advertisment

 DMK's function is out of alliance - KS Alagiri

அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியான திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது. ஒரு ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகள் கூட காங்கிரசிற்கு வழங்கப்படவில்லை.303 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் இதுவரை மொத்தம் 2 இடங்கள்தான் திமுகவினால் வழங்கப்பட்டுள்ளது. 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகூட வழங்கவில்லை. மாவட்ட அளவில் பேசிமுடித்த எந்த ஒரு ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

நாளைஊரக உள்ளாட்சிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்பொழுது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

local election K.S. ALAGIRI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe