mathavan

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிங்கம்புணரியில் திமுக முன்னாள் அமைச்சர் மாதவன்(வயது 85) உடல்நலக்குறைவினால் காலமானார்.

Advertisment

திருப்பத்தூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962, 1967, 1971, 1984 என 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மாதவன், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்.

Advertisment

1962 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருக்கோஷ்டியூர் தொகுதியில் (தற்போது நீக்கப்பட்ட தொகுதி) திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும் 1967, மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், சிவகங்கை மாவட்டத்தின் தொகுதிகளில் ஒன்றான திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1984 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.