திமுகவின் 7 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

 DMK's 7th phase candidate list released!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தொடர்ந்து பல கட்டங்களாக வெளியிட்டு வரும் நிலையில் தற்போது 7ஆம் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, ஒட்டன்சத்திரம் நகராட்சி வார்டுகளுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகராட்சி வார்டுகளுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பரமக்குடி, சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, தேவகோட்டை நகராட்சிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe