DMK Youth State Convention in Salem; Minister Nehru personally inspected!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும் டிசம்பர் 17ம் தேதி, திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடக்கிறது. இதற்காக, 100 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. அமைச்சர் கே.என். நேரு, மாநாட்டுப் பணிகளை செப். 3ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisment

ஆய்வின்போது, சேலம் மாவட்ட திமுக செயலாளர்கள் எஸ்.ஆர். சிவலிங்கம், வழக்கறிஞர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம். செல்வகணபதி ஆகியோர் உடன் இருந்தனர். மாவட்ட துணைச் செயலாளர்கள் பாரப்பட்டி சுரேஷ்குமார், சின்னதுரை, அவைத் தலைவர் கருணாநிதி, ஆறுமுகம் உள்ளிட்டோரும் இருந்தனர்.

Advertisment

மாநாட்டுக்கு வரும் பார்வையாளர்களுக்கு எத்தனை இருக்கைகள் போட வேண்டும், வாகனங்கள் எங்கே நிறுத்த வேண்டும், உணவு உபசரிப்பு உள்ளிட்ட பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.என். நேரு ஆலோசனைகளை வழங்கினார்.