DMK worship at the temple to win the urban election!

விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மரக்காணம், அனந்தபுரம் ஆகிய மூன்று பேரூராட்சிகள் திண்டிவனம் நகராட்சி ஆகியவற்றிற்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என திமுகவினர் சில தினங்களுக்கு முன் சுயம்பு பிள்ளையார் கோயிலில் வழிபாடு நடத்தினர். அதில் மாவட்டச் செயலாளர் எனும் முறையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார்.

Advertisment

DMK worship at the temple to win the urban election!

Advertisment

இந்நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் திண்டிவனம் கிடங்கல் பகுதியில் உள்ள அன்ப நாயகர் கோயிலில் மீண்டும் திமுகவினர் வழிபாடு நடத்தினர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி பெயரில் அர்ச்சனை செய்துள்ளனர். மேலும், நகராட்சி கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடும் அனுசுயா சேது நாதன் பெயருக்கும் அர்ச்சனை செய்துள்ளனர்.

திண்டிவனம் நகராட்சி சேர்மன் பதவி பொது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நகராட்சி கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடும் அனுசுயா சேது நாதன் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது அப்பகுதியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.