Advertisment

திமுக அவரச செயற்குழு கூட்டம்... முக்கிய பொறுப்புகள் அறிவிக்க வாய்ப்பு!?

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவசர செயற்குழு நடைபெறுகிறது தவறாமல் அனைவரும் கலந்த கொள்ள வேண்டும். அறிவிக்கை வெளியிடப்பட்டது.

Advertisment

இந்த அவசர செயற்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் சில முக்கிய முடிவுகளை எடுத்து அதிரடியாக அறிவிக்கப் போகிறார் என்று அறிவாலய வட்டாரங்களில் சொல்கிறார்கள். தலைமைக் கழகப் பதவிகளில் சில முக்கிய மாற்றங்களை ஸ்டாலின் செய்யப்போகிறார்.

DMK Working Committee Meeting...Opportunity to announce major responsibilities!

கட்சியின் கழக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு கொடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.. அதேபோல் தலைமைக் கழகப் பொறுப்பில் உள்ளவர்கள் சிலர் விடுவிக்கப்பட்டு, புதிதாகச் சிலர் தலைமைக் கழகப் பொறுப்புக்கு வரவுள்ளனர்.

Advertisment

அதுபோலவே சில மாவட்டச் செயலாளர்களும் மாற்றப்படவுள்ளனர் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதற்கான அறிவிப்பு அவசர செயற்குழு முடிந்தவுடன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு இந்த அவசர செயற்குழு கூட்டம் முடிந்தவுடன் கட்சியில் தலைமைகழகத்தில் முக்கிய பொறுப்புக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது என்கிறார்கள்.

meetings
இதையும் படியுங்கள்
Subscribe