Advertisment

திமுக பெண் கவுன்சிலர் சடலமாக மீட்பு; கரூரில் பரபரப்பு

DMK woman councilor recovered; There is excitement in Karur

கரூரில் திமுக பெண் கவுன்சிலர் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கரூர் மாவட்டம் சென்னாசமுத்திரம் பேரூராட்சி பகுதியின் ஏழாவது வார்டு திமுக கவுன்சிலர் ரூபா (வயது 48) வீட்டு வேலை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். கடந்த ஐந்தாண்டுகளாக கரூரில் இருக்கக்கூடிய பல்வேறு வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று காலை வணக்கம் போல வீட்டில் இருந்து கரூருக்கு வீட்டு வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு பேருந்தில் சென்றுள்ளார்.

Advertisment

மாலை 5 மணி ஆகியும் வீடு திரும்பாததால் ரூபாவின் மகன் கோகுல் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அவர் வீட்டு வேலை செய்த வீடுகளில் எல்லாம் விசாரித்துள்ளார். ரூபா காலை முதலே இங்கே வரவில்லை என தெரிவித்துள்ளனர். உடனடியாக அம்மாவின் செல்போனுக்கு கால் செய்த பொழுது செல்போன் அணைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் கரூர் போலீசாரோ நீங்கள் இருப்பது ஈரோடு பகுதியைச் சேர்ந்தது என்பதால் கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் கரூர் மாவட்டம் பாலமலை அருகே உள்ள குமாரசாமி என்பவருக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் பெண்ணுடைய சடலம் ஒன்று அரை நிர்வாண கோலத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது அது காணாமல் போன ரூபாவின் உடல் என உறுதிப்படுத்தப்பட்டது. தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்த ரூபாவின் உடலை மீட்டு போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்துள்ள காப்பாரம்பட்டி போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக பெண் கவுன்சிலர் அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Investigation police Councillor karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe