Advertisment

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை

DMK woman councilor inciedent with her family

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 13வது வார்டு நகர் மன்ற திமுக கவுன்சிலராக தேவிபிரியா என்பவர் இருந்து வந்தார். இவது கணவர் அருண்லால். இத்தம்பதியருக்கு 18 வயதில் ஒரு மகளும் இருந்தார். இந்நிலையில் தாய் - தந்தை இருவரும் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்ட நிலையில் 18 வயது மகளும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

இச்சம்பவம் குறித்து அறிந்துசம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் நகர போலீசார், மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

police councilor namakkal rasipuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe