Advertisment

“தென் மாவட்டங்களில் திமுக 100 சதவீத வெற்றி பெறும்” - ஐ.பெரியசாமி

publive-image

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதி பெரும்பாறை மலை கிராமத்தில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும்தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி கலந்து கொண்டு அப்பகுதி மலைக்கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் மிளகு ஏலக்காய் தோட்டங்களுக்கு சென்று குறு விவசாயிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் திறந்த வெளியில் ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன் தலைமையில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் ஐ.பெரியசாமி பொதுமக்கள் மற்றும் திமுகவினரிடம் திண்ணைப் பிரச்சாரப் பாணியில் பேசும்போது, “தென் மாவட்டங்களில் திமுக 100 சதவீத வெற்றி பெறும். இப்போது உள்ள அதிமுக அமைச்சர்கள் தங்கள் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றிக் கொள்வே தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள்.

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்டாலின் அலை வீசப்போகிறது இதில் திமுக மாபெரும் வெற்றி பெறும். ஸ்டாலின் தமிழக முதலமைச்சராவதை தடுப்பதற்கு இனி தமிழகத்தில் எந்த சக்தியும் கிடையாது” என பேசினார். எனவே திமுகவினர் ஒற்றுமையுடன் பாடுபட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

i periyasamy Dindigul district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe