ADVERTISEMENT

“விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எந்த திட்டத்தையும் தி.மு.க. செயல்படுத்தாது” - சுப்புலட்சுமி ஜெகதீசன்

03:07 PM Nov 10, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூர் அருகே உள்ள தேனவ குந்தி என்ற இடம் வரை குழாய் மூலம் பெட்ரோலியம் கொண்டு செல்வதற்காக விவசாய விளை நிலங்களில் குழாய்கள் அமைக்கும் திட்டத்தை (ஐ.டி.பி.எல்.) என்ற பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்படுத்த தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்துக்காக விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க தொடர்ந்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி உள்பட இந்த 6 மாவட்ட விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை வழியாக செயல்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஐ.டி.பி.எல். திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்காக விவசாயிகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டு அதன் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டும், எதையும் ஏற்காமல் ஐ.டி.டி.எல். நிறுவனம் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அதன் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் விளை நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வருகிற 20-21ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் அறிக்கையில் அறிவிப்பாக முக்கிய கூட்டணி கட்சிகள் வெளியிட்டு இந்த பிரச்சனைக்கு முடிவு காணும் வகையில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.

இந்த கோரிக்கை மாநாடு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆவரங்காட்டு வலசு என்ற கிராமத்தில் நடந்தது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் காசியண்ணன் இம்மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். இதன் ஒருங்கிணைப்பாளர் முனுசாமி முன்னிலை வகிக்க, தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ம.தி.மு.க. ஈரோடு எம்.பி .கணேசமூர்த்தி, கம்யூனிஸ்ட் திருப்பூர் எம்.பி. சுப்பராயன், தி.மு.க. சேலம் எம்.பி. பார்த்திபன், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு எம்.எல்.ஏ. உட்பட முக்கியமான அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு குழாய்கள் மூலம் பெட்ரோலியம் கொண்டு செல்லும் ஐ.டி.பி.எல். திட்டத்தால் விவசாயிகளுக்கு அவர்களின் உயிர் மூச்சாக, வாழ்வாதாரமாக இருக்கும் விளை நிலங்கள் துண்டாக்கப்பட்டு எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்று பேசினார்கள்.

தி.மு.க. துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், "விவசாய விளை நிலங்கள் என்பது நமக்கு உணவு கொடுக்கும் தாய் போல, அரசின் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எந்த திட்டத்தையும் தி.மு.க. செயல்படுத்தாது. செயல்படுத்தவும் விட மாட்டோம். ஆட்சி மாற்றம் விரைவில் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி அமைக்கவுள்ளது. உறுதியாக விவசாயிகளின் விளை நிலங்கள் காப்பாற்றப்படும்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT