திமுக மீண்டும் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் - ஸ்டாலின் தலைமையில் முடிவு

dmk meet

திமுக மாவட்ட கழகச்செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பதா? அல்லது பங்கேற்பதா? என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

d2

அந்த ஆலோசனையில், ’’அதிமுகவின் கைகளில் சிக்கிச்சீரழியும் சட்டமன்ற ஜனநாயகத்தை மீட்டுருவாக்கிட திமுக மீண்டும் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கும். சட்டமன்ற ஜனநாயகத்திற்கும் மரபுகளுக்கும் ஆக்கப்பூர்வமான அறிவார்ந்த விவாதங்களுக்கும் அதிமுக ஒத்துழைக்கவில்லை என்றாலும், எப்போது ஜனநாயகத்தின் மீதும் சுதந்திரமான கருத்து பரிமாற்றங்களின் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் திமுக, தோழமை கட்சித்தலைவர்களின் கருத்துக்கும் வேண்டுகோளுக்கும் இந்த அரசால் பாதிக்கப்படும் மக்களின் எதிர்பார்ப்பிற்கும் மதிப்பளித்து, இனிவரும் நாட்களில் சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மாவட்ட கழக செயலாளர்களின் இந்த கூட்டம் தீர்மானிக்கிறது ’’ என்று முடிவு எடுக்கப்பட்டது.

assembly Meeting stalin
இதையும் படியுங்கள்
Subscribe