Advertisment

காவிரி விவகாரத்தில் தமிழர்களை திமுக முட்டாளக்க நினைக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!

காவிரி விவகாரத்தில் தமிழர்களை திமுக முட்டாளக்க நினைக்கிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

Advertisment

காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் நடத்துவது தமிழர்களுக்கான போராட்டமா? அல்லது கூட்டணி கட்சியினர் வெற்றி பெற நடத்தும் போராட்டமா? நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்கின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காங்கிரஸ் கட்சியிடம் ஏன் ஸ்டாலின் ஆதரவு கேட்கவில்லை? தமிழர்களை திமுக முட்டாளக்க நினைக்கிறது.

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என காங்கிரஸ் போராடி வருகிறது. காவிரி போராட்டத்திற்கு காங்கிரசையும் ஏன் அழைக்கவில்லை? இதற்கு திமுக பதில் சொல்லியே தீர வேண்டும். மு.க.ஸ்டாலின் செல்லும் பாதயாத்திரை பெங்களூரு நோக்கி சென்றால் பாராட்டுவேன். இது தமிழர்களுக்காக நடத்தும் பாதயாத்திரை அல்ல. இது அரசியலுக்காக நடத்தும் யாத்திரை.

சித்தராமையாவுக்கு எதிராக பிரசாரம் செய்ய நான் தயார். மு.க.ஸ்டாலின் அங்கு வர தயாரா? கர்நாடக முதல்வர் ஆட்சியை தக்கவைக்க, காங்கிரசும், திமுகவும் தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர். அங்கு சித்தராமையா ஆட்சி வந்தால் தண்ணீர் கிடைக்காது. கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் வந்தால்தான் எதுவும் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

cauvery
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe