Advertisment

காவிரிக்காக போராட வந்த திமுக தொண்டர் மயங்கி விழுந்து சாவு

sampan

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் கடைகளை அடைத்து சாலை மறியல் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Advertisment

அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 25 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஒரு இடமான ஆவுடையார்கோயில் கடைவீதியில் திமுக முன்னால் சமஉ உதயம் சண்முகம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

Advertisment

இந்த போராட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் அனைத்துக் கட்சியினரும் வந்தனர்.

பூவாலூர் கிராமத்தச் சேர்ந்த முத்தன் மகன் சாம்பான் (60) என்ற திமுக தொண்டரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தார்.

sampan dmk

போராட்டம் தொடங்க இருந்த நேரத்தில் சாம்பான் திடீரென மயங்கி விழ அருகில் நின்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சாம்பான் உயிர் மயங்கி விழுந்த போராட்ட களத்திலேயேபோய் இருந்தது. தகவல் அறிந்து திமுகவினர் சாம்பான் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

சாம்பான் திமுக நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். அது போல தான் இன்றும் கட்சி தலைமை அறிவித்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டத்திற்கும் கலந்து கொள்ள வந்து போராட்டக் களத்திலேயே தன்

உயிரை துறந்துள்ளார்.

falls fights Kaveri
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe