Advertisment

திமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் பறக்கும் படை சோதனை

DMK union secretary's house raided by flying soldiers

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

Advertisment

தேர்தல் நேரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு தேர்தல் பணியாற்றி வரும் திமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

சிதம்பரம் அருகே உசுப்பூர் ஊராட்சியில் ராஜேந்திரன் கார்டன் பகுதியில் திமுக கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சங்கர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் திருமாவளவனுக்கு தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். திருமாவளவன் செவ்வாய்க்கிழமை தேர்தல் அறிக்கையை இவருடைய ஒன்றியப் பகுதியில்தான் வெளியிட்டார்.

இந்நிலையில் புதன்கிழமை மாலை அண்ணாமலை நகர் பகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் காரில் பணம் வைத்துக் கொண்டு விநியோகப்பதாக தகவல் வந்துள்ளது எனவும்,சங்கரிடம் காரை சோதனை செய்ய வேண்டும் எனவும்கூறியுள்ளனர். நடத்தப்பட்ட சோதனையில் ஒன்றும் இல்லை என தகவல் அதிகாரிகள் அவர்களின் உயர் அதிகாரிக்கு தெரிவித்துள்ளனர்.

nn

பின்னர் வீட்டில் ரூ.6 கோடி பணம் உள்ளது என புகார் வந்துள்ளதாக தேர்தல் பறக்கும் படையினர் வீட்டின் உள்ளே சென்றுள்ளனர்.இதனையறிந்த திமுகவினர் அவரது வீட்டிற்கு எதிரே ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாடாளுமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Election inspection Thirumavalavan vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe