அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட திமுக ஒன்றிய செயலாளரின் மகன் கைது

DMK union secretary son who released reels at Anganwadi center arrested

வேலூர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த திமுகவின் வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் மற்றும் வேலூர்திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரனின் மகன் சரண் என்பவர் வெங்கடாபுரம் பகுதியில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் பார் போல் செட் அமைத்து மலையாள படக் காட்சியை ரீகிரியேசன் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இது சர்ச்சையான நிலையில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக அரசு கட்டிடத்தில் அத்துமீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் திமுக பிரமுகரின் மகன் சரண் உட்பட 3 பேரைக் கைது செய்த சத்துவாச்சாரி காவல் துறையினர், விசாரணைக்குப் பிறகு காவல் நிலைய பிணையில் அனுப்பினர்.

arrested police
இதையும் படியுங்கள்
Subscribe