/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SALEM DM3.jpg)
தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி, அக்கட்சியினர் சேலத்தில் ஏழைகளுக்கு இலவச அரிசி, அன்னதானம், வேட்டி, சேலை என நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கந்தாஸ்ரமம் செல்லும் சாலையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 100 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. வளையக்காரனூரில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் ஆகியோர் படங்கள் அச்சிட்டு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டி&ஷர்ட் வழங்கப்பட்டது. மேலும், ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை, அன்னதானம் வழங்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SALEM DMK3.jpg)
அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, விளிம்பு நிலை மக்களுக்கு அரிசி வழங்கினர். மாசிநாயக்கன்பட்டியில் கட்சிக் கொடியேற்றினர். கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் விழா ஏற்பாடுகளை விரிவாக செய்திருந்தார்.
முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்து, ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார், பேரூர் பொறுப்பாளர் பாபு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நடராஜ், ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் பாரதி ஜெயக்குமார், பிரீத்தி மோகன், செந்தில், உஷா ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Follow Us