தமிழ்நாட்டை தூய்மையற்ற மாநிலமாக திமுக அரசு மாற்றிக் கொண்டிருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தூய்மை நகரங்கள் குறித்து மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 45 வது இடத்தில் மதுரையும், 44 வது இடத்தில் சென்னையும், 42வது இடத்தில் கோவையும் இருப்பதும் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், 'திமுக அரசின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம். தமிழக முதல்வர் தமிழகத்தின் தூய்மை குறித்த பிரச்சனைகளில் தனிக் கவனம் காட்டி தூய்மையில் சிறந்த நாடு தமிழ்நாடு என்று சிறப்பினை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.