இன்றைய சட்டசபைக் கூட்டத்தில், நீட் மசோதாக்கள் நிராகரிப்பு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தைப் பற்றி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, நீட் மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்த தகவலை மறைத்து, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தவறான தகவலை கூறியதற்காக அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவே தகவல் வந்தது எனவும், நான் கூறியது தவறு என்றால், பதவி விலக தயாராக இருப்பதாகவும் கூறினார்.
அமைச்சரின் இந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.