
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டத்தால் ஒட்டு மொத்த விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என்று விவசாயிகளும், விவசாய சங்கங்களும், எதிர்கட்சிகளும் சொல்வதை அலட்சியப்படுத்தி மோடி அரசு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி ஒப்புதலும் பெற்றுவிட்டது. இந்தச் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடியும் கூறிவிட்டார். இந்த நிலையில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக தமிழகத்தில் தி.மு.க கூட்டணிக்கட்சிகள் 28 ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விவசாயகளுக்கு ஆதரவாக போராடினாலும் வழக்கா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.