முன்பெல்லாம், அநீதி எனத் தெரிந்தால் புகார் அளிப்பார்கள்; செய்தியாளர்களுக்குத் தகவல் தெரிவிப்பார்கள். இன்றைய காலக்கட்டத்திலோ, அந்த அநீதி குறித்த விபரங்களை, வாட்ஸ்அப் மற்றும் முகநூல் போன்ற வலைத்தளங்களில் பதிவிட்டு, அநீதிக்கு எதிரான கோபத்தை தணித்துக் கொள்கின்றனர்.
மதுரைவாசிகள் சற்று மாறுபட்டவர்கள். தங்களின் கோபதாபங்களை வால்போஸ்டர் அச்சிட்டு ஒட்டிவிடுகின்றனர்.அண்ணா தொழிற்சங்கம் (ATP) – TNSTC புறநகர் கிளை உண்மை விசுவாசிகள் என்ற பெயரில், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்மற்றும் செல்லூர் ராஜு ஆகியோரின்படங்களைப் போட்டு, ’மதுரை மண்டலத்தில் பலத்தில் இருப்பது தி.மு.க என்பது நிரூபணமாகியுள்ளது. அ.தி.மு.க என்ன செய்து கொண்டிருக்கிறது?’ என்று போஸ்டர் வாயிலாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.