Advertisment

‘மோடிக்கு அல்வா தருவோம்..’ - திமுக விநோத பிரச்சாரம்

DMK strange campaign against Prime Minister Modi by giving halwa to people

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கல் கிராமத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

கூட்டத்திற்கு ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ். ஞானவேலன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமைக் கழகப் பேச்சாளர் குடியாத்தம் பாரி கலந்துகொண்டு நிதிநிலை அறிக்கை குறித்து விளக்கிப் பேசினார். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisment

DMK strange campaign against Prime Minister Modi by giving halwa to people

மோடி 10 ஆண்டுக்கால ஆட்சியில் இந்திய மக்கள் அனைவருக்கும் அல்வா கொடுத்து வருகிறார், ஆனால் நடக்க உள்ள பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் பிரதமர் மோடிக்கு, பாஜகவுக்கு அல்வா வழங்குவோம் என்றார். பேசியதோடு நிற்காமல் ஸ்வீட் கடையில் இருந்து வாங்கி வந்து பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கட்சியினர் அல்வா வழங்கினர்.

இதேபோல் வெலதிகாமணிபெண்டா, இளையநகரம், மதனாஞ்சேரி, ஜாப்ராபாத் ஆகிய ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe