Advertisment

திமுக மாநில மகளிரணி புரவலர் நூர்ஜகான் பேகம் இயற்கை எய்தினார்...

DMK noorjagan begam

திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தநூர்ஜகான் பேகத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை அப்போலா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.

Advertisment

நூர்ஜகான் பேகம் ஆரம்பகாலத்திலிருந்தே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டவர். பொதுக்கூட்டம், பிரச்சாரம் மூலம் தன் ஆற்றலை வெளிப்படுத்தி பேசி வந்ததின் மூலம் தலைமை கழக பேச்சாளராகவும், மாநில மகளிர் அணி செயலாளராகவும் இருந்து வந்தார். அதோடு கலைஞர், பேராசிரியர் அன்பழகன், திமுக தலைவர் ஸ்டாலின்,கனிமொழி எம்.பி. ஆகியோரின்மதிப்பிற்குரியவராவார். கடைசி வரை கட்சிக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் முதல் ஆளாக போய் நிற்பதுடன் மட்டுமல்லாமல் கூட்டத்திலும் காரசாரமாக பேசுவார். அவரது இறப்பு செய்தி கேள்விப்பட்டு மாநில அளவில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும், மகளிர் அணியினரும் திண்டுக்கல்லுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

Advertisment

Dindigul district wing Women
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe