Advertisment

'இன்னும் கைது செய்யாமல் விட்டுவைத்திருப்பது எதற்காக?' - திமுக ஸ்டாலின் கேள்வி!

DMK Stalin's question!

Advertisment

தமிழக கூடுதல் டி.ஜி.பி.ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்தபாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரின் அடிப்படையில், இந்தப் புகாரை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.ராஜேஷ் தாஸ், கட்டாயக் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஆறுபேர் கொண்ட விசாகா குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் தாஸ் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கசி.பி.சி.ஐ.டி, எஸ்.பி. முத்தரசி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் புகாரில்உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.பி. கனிமொழி 28.02.2021 அன்றுசென்னையில் திமுக மகளிரணி சார்பில்போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் “பெண் எஸ்.பி.யின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த கூடுதல் டி.ஜி.பிமற்றும் எஸ்.பியை கைது செய்ய வேண்டும். பெண் எஸ்.பி.க்கு கொலை மிரட்டல் விடும்துணிச்சல் குற்றவாளிகளுக்கு எப்படிவந்தது. அந்த இரண்டு அதிகாரிகளையும் தற்போது வரை கைது செய்யாமல் விட்டுவைத்திருப்பது எதற்காக?” எனதிமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

sexual harassment police stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe