Advertisment

தி.மு.க.வின் அடுத்த அதிரடி: உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்கிறார்

தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளராக தற்போது இருப்பவர் முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினை தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்க முடிவு செய்துள்ள தி.மு.க. தலைமை அதற்கான வேலையை துரிதமாக செய்தது.

Advertisment

u

இந்த விசயம்தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாமிநாதன் ராஜினாமா கடிதம் கொடுக்கிறார். இதனை தொடர்ந்து 31 அல்லது ஜீன் 1ந் தேதி உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக அறிவிக்கப்பட உள்ளார்.

uthayanithi stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe