Skip to main content

தி.மு.க.வின் அடுத்த அதிரடி: உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்கிறார்

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

 

தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளராக தற்போது இருப்பவர் முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன்.   நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினை தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்க முடிவு செய்துள்ள தி.மு.க. தலைமை அதற்கான வேலையை துரிதமாக செய்தது.

 

u

 

இந்த விசயம் தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் தெரிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து சாமிநாதன் ராஜினாமா கடிதம் கொடுக்கிறார். இதனை தொடர்ந்து 31 அல்லது ஜீன் 1ந் தேதி உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக அறிவிக்கப்பட உள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்த அமைச்சர்கள் (படங்கள்)

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று  (18.01.2023) காலை  11.00 மணியளவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை  சார்பில்  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து  நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

 

Next Story

கதறி அழுத பொன்முடி; ஆறுதல் தெரிவித்த உதயநிதி

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

Ponmudi cried; Udhayanidhi expressed his condolences

 

அமைச்சர் பொன்முடியின் தம்பியான தியாகராஜன் பிரபல சிறுநீரக சிறப்பு மருத்துவராவார். கடந்த சில நாட்களாக தியாகராஜன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவர் தியாகராஜன் உயிரிழந்தார்.

 

இதனைத் தொடர்ந்து அவரது உடல் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மருத்துவர் தியாகராஜனுக்கு பத்மினி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். மருத்துவர் தியாகராஜனின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “அமைச்சர் பொன்முடியின் தம்பியான மருத்துவர் தியாகராஜன் மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன். தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

 

மருத்துவர் தியாகராஜனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலினிடம் தம்பியை இழந்து வாடும் அமைச்சர் பொன்முடி கதறி அழுதார். அவருக்கு உதயநிதி ஆறுதல் தெரிவித்தார். உடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.