இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா? -ஸ்டாலின் டுவிட்

புதிய கல்வி கொள்கை நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த புதிய வரைவுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், திருநள்ளாறு அருகே செயற்கைகோள் நிற்பது, தவறான தேசிய கீதம் என தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தற்போது 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்தால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

dmk stalin twit

12 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி என அச்சிடப்பட்டதால் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. தமிழ் கி.மு. 300 முதல் வழக்கத்தில் உள்ளதாகவும், சமஸ்கிருதம் கி.மு. 2000 முதல் வழக்கத்தில் இருப்பதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் மேலும் புதிய சர்ச்சைகளை உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த சர்ச்சைக்குதிமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதிபதிவில்,

எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? தமிழ் 2300 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால் சமஸ்கிருதமோ 4000ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகம். காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா? எனக்கூறியுள்ளார்.

education Stalin DMK twitter
இதையும் படியுங்கள்
Subscribe