''தமிழகத்தில் பாலில் நச்சுதன்மை''- மத்திய அரசின் தகவல்கள் அதிர்ச்சியை தருகிறது- ஸ்டாலின் ட்விட் 

தமிழகத்தில் பாலில் நச்சுத்தன்மை உள்ளதாக மத்திய அரசுசெய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில்,

dmk stalin twit

பாலில் நச்சுத்தன்மை குறித்து டி.ஆர்.பாலு எம்பிஎழுப்பிய கேள்விக்கு, கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமான AFM1 நச்சுப்பொருள் மாட்டுத் தீவனம் மூலம் பாலில் கலந்திருப்பதாகவும், இதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து. இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து முதல்வர் தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். எனக்கூறியுள்ளார்.

milk stalin twitter
இதையும் படியுங்கள்
Subscribe