ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு வயது குழந்தைசுஜித்தின் மறைவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து இரங்கல் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
ட்டுவிட்டரில் திமுக தலைவர் ஸ்டாலின்வெளியிட்டுள்ளஇரங்கல் செய்தியில்,
நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான். சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது?அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்! என பதிவிட்டுள்ளார். ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி!