நாளை சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தலைமையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எதிர்ப்பு பேரணி என்ற தலைப்பில் பிரம்மாண்டமான பேரணி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது.

Advertisment

dmk Stalin -tomorrow rally in Chennai

இந்தநிலையில் நாளை நடக்கவிருக்கும் பேரணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, மக்களின் பேரலை என்ற பேரணியால் நாளை சென்னை குலுங்கட்டும், அதைக்கண்டு டெல்லி அதிரட்டும். இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்கள் உள்ளிட்டோரின் உரிமைகள் மீட்சிப் பெறட்டும். மதச்சார்பற்ற தன்மையை மாத்திடும் வகையில் ஆளும் பாஜக அரசு குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. மக்களை மதம் எனும்கோடாரியால் பிளக்கும்இந்த சட்டத்திற்கு அதிமுக அரசு அளித்துள்ளது.

நாட்டின் குடிமக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவது தேச விரோதம் என்று கூறுகிறார்கள். ஜனநாயக சக்திகள் ஒருமித்து நிற்கும்போது அரசதிகாரம், அத்துமீறல், அடக்குமுறைகள் ஏதும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.