மதுரையில்முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் தனது ஆதரவாளர்கள் பல்லாயிரகணக்கானோருடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். விழா மேடையில் ராஜ.கண்ணப்பன் கலைஞர் அறக்கட்டளைக்கு 50 லட்ச ரூபாய்க்கான காசோலையை ஸ்டாலினிடம் வழங்கினார்.

இந்த விழாவில், பொள்ளாச்சி சம்பவத்தில் வீடியோக்கள் பல லட்சக்கணக்கில் பணம் விளையாடி வருகிறது . இந்த சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் சம்பந்தப்பட்டிருக்கார் என (நக்கீரன் ஆதாரத்தைசுட்டிக்காட்டி) நேரடியாக குற்றம் சாட்டுகிறேன். பொள்ளாச்சியில் 250 பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்தை நான் சும்மா விட மாட்டேன்எனஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

DMK STALIN SPEECH IN MADURAI

Advertisment

இந்த விழாவில் தி மு க தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:,

Advertisment

சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த மதுரையில் விழா நடந்து கொண்டு உள்ளது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற கூறும் தலைநகரில் இந்த விழா நடக்கிறது. இந்த விழா வரும் காலத்தில் நமது வெற்றியை எதிரொலித்து வருகிறது.

ராஜ.கண்ணப்பன் என்னிடம் வந்து தேதி கேட்டார். திமுகவில் இணைய தேதி வேண்டும் என கேட்டார். தற்போதும் இந்தக் கட்சியில் தானே இருக்கிறீர்கள் என கேட்டேன். அவர் முக்கியமான நேரத்தில் வந்து சேர்த்துள்ளார். ராஜகண்ணப்பன் ஒரு தனி நபர் அல்ல. அவரிடம் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். திமுக என்பது ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கம். அவர்களுக்காக வாதாடும் இயக்கம் தி.மு.க ஆகும்.என்றார்மேலும் பேசுகையில்,

DMK STALIN SPEECH IN MADURAI

ஹைட்ரோகார்பன்கிணறுகளை மூடாமல் எவ்வாறு வேளாண் மண்டலத்தை அமல்படுத்துவீர்கள். விவசாயி அவதாரம் எடுக்கும் எடப்பாடி, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், போன்ற திட்டங்களில் விவசாயிகளை பாதிக்க விடுகிறார். மத்திய அரசிடம் மண்டியிட்டு, எடப்பாடி விருதுகளை வாங்கி வருகிறார். 3 லட்சம் கோடியை முதலீட்டை பெற்றதாக கூறும் எடப்பாடி வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?

8 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் அ.தி.மு.க.வில் செய்த அட்டுழியம் செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையிலும், சிறிது நாளிலேயே விடுவிக்கட் பட்ட அவலம் நடந்தது. அது தான் இந்த ஆட்சியின் அவலம் தான். இந்த எடப்பாடிக்கு தகுதி இருக்கிறதா, தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் படி பதிவான வழக்குகளில் 13 சதவீதத்தில் தான் தீர்வு காணப்பட்டுள்ளது என கூறுகிறது.

DMK STALIN SPEECH IN MADURAI

தற்போது இந்த லட்சணத்தில் பெண் பாதுகாப்பு குறித்து பேச இவர் களுக்கு தகுதி உள்ளதா? இவர்கள் ஆட்சியில் பொள்ளாச்சி ஊர் பெயரை சொல்ல முடியுமா? என்னிடம் 2 பெண் காவலர்கள், தனது ஊர் பெயரை சொல்லக் கூட வெட்கப் படுகின்றனர். எடப்பாடிக்கு ஊழல், லஞ்சம், துப்பாக்கி சூட்டிற்கு, குட்கா விற்கு விருதுகள் வழங்கலாம், ஓ பிஎஸ், மீது சொத்து குவிப்பு வழக்கு, விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கு, எடப்பாடி மீது கொலை, கொள்ளை வழக்குகள உள்ளன.

வேளாண் மண்டலம் அறிவித்துள்ளீர்களே அங்குள்ளஹைட்ரோ கார்பன் கிணறுகள் என்ன ஆகும்.எப்படி இந்த இயக்கத்தில் வந்து சேர்ந்துள்ள உங்களுக்கு ஒரு கட்டளையை தெரிவிக்கிறேன். தற்போது எடப்பாடி அரசு 2 வேலைகள் செய்கிறது கடன் வாங்குகிறது, அதனை கொள்ளையடிக்கிறது.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளபோது. கடன் தொகை உயர்ந்துள்ளதாக அவர்களே அறிவித்துள்ளனர். திமுக ஆட்சி காலத்தில் 1 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது 4.65 கோடியாக உயர்ந்துள்ளது. சாமானியன் வீட்டுப் பிள்ளை கலைஞர் இந்த கட்சியை வழி நடத்தி வந்தார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தியது. காவேரி ஆணையம் பெற்றுத் தந்தது , உள்நாட்டு விமான நிலையத்திற் காமராஜர் பெயர் வைத்தது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், நீண்ட நெடிய சாலைகள், செல்போன் பாமரர் கையில் வந்ததும் திமுகவின் சாதனை ஆகும். இந்த சாதனை கட்சியில் நீங்கள் வந்து சேர்ந்துள்ளீர்கள்.

DMK STALIN SPEECH IN MADURAI

மேலும்,கடன் வாங்கி, கடன் வாங்கி கொள்ளையடிக்கின்றனர். இதனை தவிர வேறு எந்த சாதனை எதுவும் இல்லை. ஜெயலலிதா அம்மையார் குறித்து அமைச்சர்கள் நினைப்பதில்லை. 3 ஆண்டு கழித்து தற்போது ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் என பெயர் வைத்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணையில் பணி புரிந்த ஜெயஸ்ரீ என்ற பெண் அதிமுக வைத்த பேனர் விழுந்து இறந்த போது, அதிமுகவினர் சென்று பார்க்க வில்லை. ஆறுதலோ, நிதி யோ வழங்கவில்லை. ஆனால் தற்போது அதிமுகவினர் பெண்கள் பாதுகாப்பு என கூறுவது எப்படி ஏற்பது.மதுரையில் தமிழ்த்தாய் சிலை அமைப்பீர்கள் என்று சொன்னீர்களே? அது என்ன ஆனது.

எய்ம்ஸ் அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன.? 2015ல் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் 2017ல் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் பொது வழக்கு போட்ட பின் 4 மாதத்தில் அறிவுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் 2018 வரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் 2019ல் வெறும் கண்துடைப்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கப்பட வில்லை.

தற்போது எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அறிவிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்ட போர்டை கூட காணவில்லை. (அதற்காக ஒரு போட்டோவை காண்பித்தார்.) பொள்ளாச்சி சம்பவத்தில் வீடியோக்கள் பல லட்சக்கணக்கில் பணம் விளையாடி வருகிறது . இந்த சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் சம்பந்தப்பட்டிருக்கார் என நேரடியாக குற்றம் சாட்டுகிறேன். இந்த சம்பவத்தை திமுக ஆட்சிக்கு வந்தால், சும்மா விட மாட்டோம். எனவும் ஸ்டாலின் பேச்சு,நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் என்னாச்சு, 7 பேர் விடுதலை அறிவிப்பு தீர்மானம் என்னாச்சு, என்.பி.ஆர், என்.ஆர்.சி உங்களது நிலை என்ன.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.