அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைதான திமுகவினரை விடுவிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இதுதொடர்பான அறிக்கையில்,கைது செய்யப்பட்ட திமுகவினர் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். கரோனாகாலத்தில் போராட்டம் வேண்டாம் என்றால் கோவையில் நடப்பது பொறுமையை சோதிப்பதாக உள்ளது.தன்னை கேட்பதற்கு யாருமில்லை என்ற தைரியத்தில் இருக்கிறார் அமைச்சர் வேலுமணி. இதே போக்கு தொடர்ந்தால் ஊழலை பட்டியலிட்டு மாபெரும் போராட்டத்தை கோவையில் நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.