Advertisment

நீதி வழங்கும் துணிவு அரசுக்கு இருந்திருந்தால் உயிர் பறித்த போலீசார் சுதந்திரமாக உலவ முடியுமா?-ஸ்டாலின் கேள்வி  

dmk Stalin Question

தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டஜெயராஜ்,பென்னிக்ஸ்ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தநிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான வழக்குநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று சி.பி.ஐ.-க்கு மாற்றப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Advertisment

தற்போது இது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, பல்வேறு தரப்பினரின் கடும் அழுத்தத்தால் ஜெயராஜ், பென்னிக்ஸ்மரண வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், ஊடகத்தின் இரண்டு நாள்அழுத்தத்தால் வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றியுள்ளார் முதல்வர் எனத் தெரிவித்துள்ள ஸ்டாலின், நீதி வழங்கும் அரசியல் துணிவு அரசுக்கு இருந்திருந்தால் உயிர் பறித்த போலீசார் சுதந்திரமாக உலவ முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

admk edappadi pazhaniswamy stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe