Advertisment

''இன்று மாலைக்குள் வெளியிடவில்லை என்றால் நானே அந்த கடிதத்தை வெளியிடுவேன்''- ஸ்டாலின் பேட்டி

2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும்,தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்குதொடங்கிபட்ஜெட் தாக்கல்மீதான உரையில்பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதிக்கீடுவிவரங்களை மொத்தமாக 3.15 மணி நேரம் வாசித்தார். இந்த பட்ஜெட் மீதானசட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்.20 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும்சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் திமுகதலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

Advertisment

dmk stalin interview

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த நிதிநிலை அறிக்கை ஏன் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட கூடாது என்றுஉச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது. உச்சநீமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிற ஒருவராக இருக்கின்ற ஓபிஎஸ் நிதியமைச்சராக இருந்துநிதிநிலை அறிக்கையை படித்துள்ளார்.ஜெ.வின் மறைவுக்கு பின் அவரதுசமாதிக்கு சென்றுஇந்த ஆட்சியை அகற்ற எண்ணியது,இந்த ஆட்சிக்குஎதிராக ஓட்டு போட்டதுஇப்படி நடந்துகொண்டஅவரேஇப்பொழுது இப்படி மாறியிருக்கிறார். அவர் மாறிவிட்டாரே தவிர மற்றவர்கள் யாரும்மாறவில்லை.

Advertisment

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பத்தாவதுபட்ஜெட்,இது யாருக்கு பத்தாதபட்ஜெட்டாக, எதற்கும் பத்தாதபட்ஜெட்டாக இருக்கிறது. இது கடைசி நிதிநிலை அறிக்கை,அதுவும் இந்த ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கை. நிதிப்பற்றாக்குறை என்பது அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி வரை 1 லட்சம் கோடியில் இருந்தகடன் தற்பொழுது மூன்று மடங்கு அதிகரித்து 4 லட்சம் கோடியாகஅதிகரித்துள்ளது. இந்த நிதிநிலையை பொறுத்தவரைதொலைநோக்குதிட்டமும் இல்லை, வளர்ச்சி திட்டங்களும் இல்லை. அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணிஇலாகாவிற்கு மட்டும் அதிகம் நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் மர்மம் என்ன?

பாதுகாக்கப்பட்ட வேளாண்சிறப்புமண்டலமாகடெல்டா அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் மண்டலம் வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். அண்மையில் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டுஇங்கிருந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை டெல்லிக்குஅனுப்பி ஒரு கடிதத்தைகொடுத்ததாக செய்தி வந்தது. ஆனால் அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்று சொல்லப்படவில்லை. இப்பொழுதும் சொல்கிறேன் இன்று மாலைக்குள்அந்த கடிதத்தில் என்ன இருக்கு என்று சொல்லியாக வேண்டும், அப்படி சொல்லவில்லை என்றால் விரைவில் அந்த கடிதத்தை நானே வெளியிடுவேன் என்றார்.

stalin ops Tamilnadu budget
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe