Advertisment

அதிமுக ஓரளவிற்கு செயல்பட காரணமே திமுகதான் -ஸ்டாலின்

கேரளாவில் கனமழையால் பாதித்த பகுதிகளுக்குதிமுக சார்பில்நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த பிறகு அண்ணா அறிவாலயத்தில்திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,

Advertisment

dmk

நேற்றுசென்னைமேற்கு மாவட்ட திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய நிவாரணப்பொருட்களும், இன்று சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 35 லட்சம் ரூபாய் மதிப்புடைய நிவாரண பொருட்களும், சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 20 லட்சம்ரூபாய் மதிப்புடைய நிவாரண பொருட்களும், சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 15 லட்ச ரூபாய்க்கான நிவாரண பொருட்கள் கேரளத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பல்லவபுரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி சார்பில் 2 லட்சம் ரூபாய்க்கான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள திமுக அமைப்புகள் இந்த நிவாரண பொருட்களை அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும்.அதுமட்டுமின்றி கேரளாஅருகிலுள்ள ஈரோடு, கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்நிவாரண பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்படும்என்றார்.

dmk

Advertisment

முதல்வர் இன்னமும் மழையால் பாதித்த நிலகிரிக்கு ஆய்வுக்குசொல்லவில்லையே என்ற கேள்விக்கு,

இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் கேளுங்கள்.. அமெரிக்கா, லண்டன் போவதற்கான முயற்சியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார். ஒருவேளை அந்த ஏற்பாட்டில் இருப்பார். எனவே இதையெல்லாம் பார்க்க அவருக்கு நேரம் இருக்காது எனக் கருதுகிறேன். இன்று ஆளுங்கட்சி செயல்படாமல் இருக்கும் நிலையில் ஒரு அளவுக்கு செயல்பட திமுகதான் துணையிருக்கிறது. இதுதான் இன்றைய உண்மை நிலை.

வேலூரில் ஏசி சண்முகம் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்கிறார்களே?

அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை, எங்கள் வெற்றிக்கு நாங்கள்தான் காரணம் என்றார்.

Kerala edappadi pazhaniswamy admk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe