Skip to main content

அதிமுக ஓரளவிற்கு செயல்பட காரணமே திமுகதான் -ஸ்டாலின்

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

கேரளாவில் கனமழையால் பாதித்த பகுதிகளுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த பிறகு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,

 

dmk

 

நேற்று சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய நிவாரணப்பொருட்களும், இன்று சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 35 லட்சம் ரூபாய் மதிப்புடைய நிவாரண பொருட்களும், சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 20 லட்சம்ரூபாய் மதிப்புடைய நிவாரண பொருட்களும், சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 15 லட்ச ரூபாய்க்கான நிவாரண பொருட்கள் கேரளத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பல்லவபுரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி சார்பில் 2 லட்சம் ரூபாய்க்கான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள திமுக அமைப்புகள் இந்த நிவாரண பொருட்களை அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும். அதுமட்டுமின்றி கேரளா அருகிலுள்ள ஈரோடு, கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரண பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்படும் என்றார்.

 

dmk


முதல்வர் இன்னமும் மழையால் பாதித்த நிலகிரிக்கு ஆய்வுக்கு சொல்லவில்லையே என்ற கேள்விக்கு,

இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் கேளுங்கள்.. அமெரிக்கா, லண்டன் போவதற்கான முயற்சியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார். ஒருவேளை அந்த ஏற்பாட்டில் இருப்பார். எனவே இதையெல்லாம் பார்க்க அவருக்கு நேரம் இருக்காது எனக் கருதுகிறேன். இன்று ஆளுங்கட்சி செயல்படாமல் இருக்கும் நிலையில் ஒரு அளவுக்கு செயல்பட திமுகதான் துணையிருக்கிறது. இதுதான் இன்றைய உண்மை நிலை. 

வேலூரில் ஏசி சண்முகம் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்கிறார்களே?

அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை, எங்கள் வெற்றிக்கு நாங்கள்தான் காரணம் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு தேடி வந்த வாக்கு இயந்திரம்; வாக்களித்த 111 வயது மூதாட்டி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று(19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் கேரளாவில் மூதாட்டி ஒருவரின் வாக்கைப் பெறுவதற்காக வாக்கு இயந்திரம் வீட்டுக்கே கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது வெள்ளிக் கோத்து கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் குப்பச்சி அம்மா(111 வயது) தள்ளாடும் வயதில் தன்னுடைய வாக்கைச் செலுத்த முடியாமல் குப்பச்சி அம்மா தவித்து வந்தார். இதனால் அவருடைய வாக்கைப் பதிவு செய்வதற்காக தேர்தல் அலுவலர்கள் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

அதன்படி காஞ்சங்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளராக உள்ள குப்பச்சி அம்மாவின் வீட்டுக்கே தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் தலைமையில் வீட்டுக்குள்ளேயே தற்காலிகமாக வாக்குச்சாவடி மையம் அமைத்து அவருடைய வாக்கை பதிவு செய்தனர். குப்பச்சி அம்மா தன்னுடைய வாக்கை பதிவு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் அவருக்கு மலர் கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கினார். 

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.