புதுக்கோட்டையில் நடைபெற்றுவரும் திமுகவின், 'தமிழகத்தை மீட்போம்' கூட்டத்தில் காணொலிவாயிலாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில்,
தோப்பூரில் 'எய்ம்ஸ்' அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, இன்னும், ஒரு செங்கல் கூட வைக்கவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக 'எய்ம்ஸ்' நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார்கள். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொய் கணக்கைக்காட்டி வருகின்றனர். கரோனாவை வைத்துப் படம் காட்டி வருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் என விமர்சித்தார்.