DMK STALIN

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனாபாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்புதுக்கோட்டையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு மேற்கொண்ட பொழுதுகரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்மருந்தை இலவசமாக கொடுக்க வேண்டியது மக்கள் நல அரசின் கடமை. இலவச கரோனா தடுப்பூசியை மக்களுக்குத் தான் காட்டும் சலுகை என நினைக்கிறாரா முதல்வர். நிற்கதியாய் நிற்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிதி உதவி செய்யக்கூட முதல்வருக்கு மனம் இல்லை என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment