Advertisment

''திமுக இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்'' - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்!

'' DMK should stop this '' - BJP MLA Vanathi Srinivasan!

Advertisment

நேற்று (10/08/2021) காலைமுதல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள்மற்றும் அவருக்கு நெருக்கமான சிலருக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நிறைவடைந்தது.

கோவை பீளமேட்டில் உள்ள கேசிபிநிறுவனத்தில் இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். நேற்று காலை தொடங்கிய சோதனை நள்ளிரவில் முடிந்த நிலையில், இரண்டாவது நாளாக தற்போது மீண்டும் சோதனை துவங்கியுள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ''தனிப்பட்ட வன்மம், காழ்ப்புணர்ச்சியால் முதல்வர் பழிவாங்கும் நடவடிக்கையில்ஈடுபடுகிறார். அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையைத் திமுக கைவிட வேண்டும்'' எனகூறியுள்ளார்.

raid sp velumani Vanathi Srinivasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe