Skip to main content

பேரூராட்சியை கைப்பற்றிய திமுக!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

DMK seizes Keeramangalam municipality!

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஒரு வார்டு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 14 வார்டுகளுக்கும் 47 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக கூட்டணி 13 வார்டுகளையும், திமுகவில் சீட் கிடைக்காமல் சுயேட்சையாக நின்ற இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கூட்டணிக்கு ஒரு வார்டு கூட கிடைக்கவில்லை.

 

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்..


1. திமுக: ஜெ. நிஷா (355)
2. திமுக: சி.சிவக்குமார் (467)
3. சுயேட்சை: சித்ரா சகாயம் (210)
4. திமுக: ராமாயி (267)
5.  திமுக: எம்.எஸ்.கே.சின்னராஜா (136)
6. திமுக: சர்மிளா பானு (போட்டியின்றி தேர்வு)
7. திமுக: கனிமொழி ரவி (164)
8. திமுக: வை.தமிழ்செல்வன் (306)
9. சுயேட்சை: வை.சரவணன் (137)
10. காங்: ஏகாம்பாள் (246)
11. சிபிஐ: முத்தமிழ்செல்வி தமிழ்மாறன் (247)
12. திமுக: ஜெயகௌரி (306)
13.திமுக: த.அன்பரசன் (300)
14. திமுக: நீதிராஜன் (273)
15. சிபிஎம்: பாலமுருகன் (370) 

 

திமுக வேட்பாளர்கள் மட்டும் 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பதால் சேர்மன் நாற்காலியை திமுக கைப்பற்றுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்