DMK seizes Chidambaram mayoral post

சிதம்பரம் நகராட்சியில் இன்று நகராட்சித் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. திமுக 26, காங்கிரஸ் 2, சிபிஎம் 2, தேமுதிக 1, அதிமுக 1, பாமக 1 உள்ளிட்ட 33 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் திமுகவைச் சேர்ந்த 14வது வார்டில் வெற்றி பெற்ற கே.ஆர். செந்தில்குமார் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து இவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக நகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். பின்னர் அவர் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்றுக்கொண்டார். இவருக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சியினர் என அனைவரும் மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர் சிதம்பரம் திமுக நகர செயலாளராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

DMK seizes Chidambaram mayoral post

இதேபோல் அண்ணாமலைநகர் பேரூராட்சியில் 5வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர் பழனி பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்றுக் கொண்டார். இவருக்கு கட்சியினர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இவர் திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக அண்ணாமலை நகர் பேரூர் கழக பொருளாளராக பணியாற்றி வருகிறார்.

Advertisment