Advertisment

“சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான இயக்கம் திமுக..” - அன்பில் மகேஷ் 

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருச்சி கிழக்கு தொகுதியில் அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்து கூறி சிறப்புரையாற்றினார்.

Advertisment

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான இயக்கம் திமுக. சிறுபான்மையினர் உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்தது. சிறுபான்மை பள்ளி மாணவிகளுக்கு 3 முதல் 6ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை அளித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதற்காக இரண்டு கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற ஓய்வூதியம் அவர்கள் இறந்த பின்னர் அவர்களது குடும்பங்களுக்கு கிடைக்க வழிவகை செய்தது திமுக” என உரையாற்றினார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா, மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், ஜெயநிர்மலா, பகுதி திமுக செயலாளர்கள் மணிவேல், டி.பி.எஸ்.எஸ் ராஜ்முகமத் மோகன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் அருள்சுந்தரராஜன், துணை அமைப்பாளர்கள் மாவட்ட துணை அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

anbil mahesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe