Skip to main content

முறுக்கிவிட்டு போன மாப்பிள்ளைகள் மீண்டும் வந்துள்ளனர்: திமுகவினரை கலாய்த்த ஜெயக்குமார்!

Published on 04/06/2018 | Edited on 04/06/2018


முறுக்கிவிட்டுபோன மாப்பிள்ளைகள் மீண்ஒடும் பேரவைக்கு வந்துள்ளனர் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திமுகவினரை விமர்சித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் இச்சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் சட்டப்பேரவையில் இந்த நிகழ்வு குறித்த ஒத்திவைப்பு தீர்மானத்தில் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும். அதுவரை சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் திமுக புறக்கணிக்கும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைப் புறக்கணித்த திமுக போட்டி சட்டப்பேரவையை அண்ணா அறிவாலயத்தில் நடத்தியது. மேலும் போட்டி சட்டமன்றத்தை நெல்லை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் நடத்த திமுக திட்டமிட்டது.

இந்நிலையில், திமுக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளும் திமுகவுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து நடைப்பெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்தாலோசனை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்கப் போவதாக ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, சட்டப்பேரவையில் இன்று திமுகவினர் பங்கேற்றனர். இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,

முறுக்கிவிட்டுபோன மாப்பிள்ளைகள் மீண்டும் பேரவைக்கு வந்துள்ளனர் எனி திமுகவை விமர்சித்த அவர், எனினும் ஜனநாயக கடமை ஆற்ற வந்துள்ள திமுகவை வரவேற்கிறோம் என்றார்.

மேலும் கமல்ஹாசன் குறித்து கருத்து தெரிவித்த அவர், கமல் ஆயிரத்தில் ஒருவனா, கூட்டத்தில் ஒருவனா, தனி ஒருவனா என மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து தினகரன் குறித்து கருத்து தெரிவித்த அவர், ஆளே இல்லாத கடையில் டிடிவி தினகரன் டீ ஆத்தி வருகிறார் என விமர்சித்தார்.

சார்ந்த செய்திகள்