Advertisment

11 புதுமுகங்கள் - வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக

 DMK released the list of 11 newcomers- candidates

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவிருக்கும் நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வாயிலாக நேற்று அறிவித்திருந்தார்.

Advertisment

அதன்படி, இன்று நடைபெற இருக்கும் அந்த கூட்டத்தில் சென்னையில் மூன்று இடங்கள் என மொத்தம் 21 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிடும் பகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்ற பட்டியலும், அதேபோல் திமுகவின் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

Advertisment

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதேபோல் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் சார்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரடியாக தொகுதிகளுக்கு சென்று மக்கள் மற்றும் சிறு, குறு வணிகர்கள் கருத்துகளைக் கேட்டு அதன்படி தேர்தல் அறிக்கை தயாரித்திருப்பதாக அறிவித்திருந்தார். கனிமொழி சார்பில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறிக்கையும் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் வாசித்தார். அதன் அடிப்படையில் வெளியான பட்டியலில் தென்சென்னை-தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதிமாறன், வடசென்னை-கலாநிதி வீராசாமி, ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், தஞ்சை - முரசொலி, தருமபுரி - ஆ.மணி, ஆரணி - எம்.எஸ்.தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், காஞ்சிபுரம் - செல்வம், சேலம் - டி.எம்.செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ், நீலகிரி - ஆ.ராசா, வேலூர் - கதிர் ஆனந்த்,கோவை - கணபதி ராஜ்குமார், திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை, பெரம்பலூர் - அருண்நேரு, பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி - ராணி ஸ்ரீகுமார் என வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 50 சதவீதத்திற்கும் மேல் 11 புதிய முகங்கள் போட்டியிடுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தர்மபுரி - ஆ.மணி, ஆரணி -தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், சேலம் - செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ், கோவை - கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி, பெரம்பலூர் - அருண் நேரு, தஞ்சாவூர் - முரசொலி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தென்காசி - ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் புதுமுக வேட்பாளர்கள் ஆவர்.

தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜி.செல்வம், ஜெகத்ரட்சகன், சி.என்.அண்ணாதுரை, கதிர் ஆனந்த் ஆகியோர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது . தூத்துக்குடியில் கனிமொழி, தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், தென்காசியில் ராணி ஸ்ரீ குமார் என மூன்று பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அடிமட்ட தொண்டர்கள், ஒன்றிய செயலாளர்கள் இரண்டு பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு முனைவர்கள், இரண்டு மருத்துவர்கள், 19 பட்டதாரிகள், ஆறு வழக்கறிஞர்கள் திமுகவேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

candidates
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe