'DMK is the reason  NEET selection' - Chief Minister

கரோனா தொற்று காரணமாக போதிய இடவசதிகள் இல்லாததால் சென்னை கோட்டையில் நடைபெற வேண்டிய சட்டசபை கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுநேற்று சட்டசபை கூடியது.

Advertisment

இன்று இரண்டாம் நாளாகசட்டசபை கூட்டம் நடந்துவரும் நிலையில், இன்றையை கூட்டத்தொடரில் நீட் தேர்வால் மன உளைச்சலில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாகதிமுகதலைவரும்,எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

Advertisment

இந்நிலையில் 2010 இல் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது நீட் தேர்வுக்கு சட்டம் கொண்டுவரப்பட்டது.நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தபோது திமுக கூட்டணியில் இருந்ததா,இல்லையா? என ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலை செய்துகொண்டதற்கு திமுகதான் காரணம். கூட்டணியிலிருந்த திமுக நாட்டை குட்டிச்சுவராக்கி உள்ளது. இதனால் தான் 13 பேர் மரணமடைந்துள்ளனர். நீட் எப்போது யார்கூட்டணியில் வந்தது,யார் அறிமுகப்படுத்தினார்கள் ? பதில் சொல்லுங்கள் என ஆவேசமானார்.