திமுக மருத்துவர்களின் போராட்டத்தை தூண்டி விடுவதாக முன்னாள் இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். அரசு மருத்துவர்கள் இன்று எட்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில்,

Advertisment

 DMK provokes doctors' struggle - Pon.Radhakrishnan

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காந்தி மற்றும் பட்டேல் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,

மருத்துவர்கள் மிகவும் மரியாதைக்குரியவர்கள், போற்றுதலுக்கு உரியவர்கள், தெய்வத்துக்கு நிகராக மதிக்கக் கூடியவர்கள் அவர்கள் தங்களுடைய குறைகளை பேசித் தீர்க்க வேண்டும். அரசாங்கம் அதற்கு முன்வர வேண்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் மருத்துவர்களுடன் பேசுவதற்கு அவர்கள் தயக்கம் காட்டக்கூடாது. திமுக மருத்துவர்களின் போராட்டத்தை தூண்டிவிடுகிறது என்றார்.